ஆழியாறு கவி அருவியில் குளிக்க தடை!! சுற்றுலா பயணிகள் சோகம்;

தென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக ஒரு வாரத்திற்கு மேலாக கோயம்புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து கொண்டு வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள அருவிகள் அனைத்தும் வெள்ளப்பெருக்கு போல் காட்சியளிக்கிறது.

எனவே வரிசையாக ஒரு சில அருவிகளில் சுற்றுலா பணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் ஆழியாறு கவி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி அடுத்து உள்ள ஆழியாறு கவி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

ஏற்கனவே இன்றைய தினம் ஒகேனக்கல் பகுதிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் தென் மாவட்டங்களில் பிரதான அருவியாக காணப்படுகின்ற குற்றாலம் மற்றும் அதன் சுற்றியுள்ள இதர அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் 5 நாட்களுக்கு முன்பு தேனியில் உள்ள சுருளி அருவியிலும் சுற்றுலா பணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment