Connect with us

‘காவிரி நீர்வரத்து அதிகரிப்பு’… ஒகேனக்கல் அருவிகளில் மூன்றாவது நாளாக குளிக்க தடை!

hogenakkal 1

தமிழகம்

‘காவிரி நீர்வரத்து அதிகரிப்பு’… ஒகேனக்கல் அருவிகளில் மூன்றாவது நாளாக குளிக்க தடை!

தென்மேற்கு பருவமழையின் தாக்கம் இந்தியாவில் சற்று அதிதீவிரமாக காணப்படுகிறது. ஏனென்றால் எந்த ஒரு ஆண்டிலும் இல்லாத வகையில் தற்போதைய ஆண்டில் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையினால் மழைப்பொழிவு அதிகமாக பதிவாகி உள்ளது.

மேலும் கர்நாடகா மாநிலத்தில் பல இடங்களில் கன மழை பெய்து வருகிறது .இதனால் கர்நாடகா அரசு நாளுக்கு நாள் காவேரி நீரினை அதிக அளவு திறந்து விடுகிறது. நம் தமிழகத்திலும் மழைப்பொழிவு அதிகமாக இருக்கின்ற சமயத்தில் இவ்வாறு திறந்து விடுவது அசாதாரணமான சூழ்நிலையை உருவாக்குகிறது.

இந்த நிலையில் பல இடங்களில் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் மகிழும் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது. அதன் வரிசையில் ஒகேனக்கல் அருவிகளில் மூன்றாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது.

ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும் அந்த ஆற்றில் பரிசல் இயக்கவும் மூன்றாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்தானது வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. நேற்று மாலை 60 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில் நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top