
தமிழகம்
ஆற்றில் குளிக்க, செல்பி எடுக்க கூடாது – ஆட்சியர் எச்சரிக்கை !!!
மேட்டூர் அணையில் இருந்து 1.25 ஆயிரம் கன அடி நீர் வருவதால் காவிரி ஆற்றில் குளிப்பது செல்பி எடுப்பதற்கு தடை என சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அறிவித்துள்ளார்.
மேட்டூர் அணையின் நீர் மட்டம் ஆனது தற்போது முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் தற்போது அணையானது கடல்போல் காட்சி அளித்து வருகிறது. அதேசமயம் கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அம்மாவட்ட ஆட்சியர் அணையின் நீர் மடமானது முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் தண்ணீரை முழுவதுமாக வெளியேற்றி வருவதாக கூறினார்.
மேலும், இதன் காரணமாக குளித்தல், துணிகளை துவைத்தல், நீச்சல் அடித்தல், செல்பி எடுத்தல் போன்ற செயல்பாடுகள் இருக்க கூடும் என்பதால் இப்பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டான் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
