அனுமதியின்றி பேனர் வைப்பு; விஜய், அஜித் ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு!!

துச்சேரியை பொருத்தவரையில் பேனர் தடை சட்டம் இருந்துவருகிறது. இருந்தபோதிலும் அவ்வப்போது அரசியல் தலைவர்கள் மற்றும் முன்னணி நடிகர்களின் பேனர்கள் மற்றும் கட்டவுட் வைப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் அஜித் நடித்துள்ள துணிவு மற்றும் விஜயின் வாரிசு ஆகிய இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளியாகியதால் ரசிகர்கள் போட்டிப்போட்டுக்கொண்டு 50 அடி உயர கட்டவுட் மற்றும் 400 அடி உள்ள பேனர்களை புதுச்சேரி முழுவதும் வைத்து தக்களது ஆதரவுகளை ரசிகர்கள் தெரிவித்து வந்தனர்.

தற்போது அனுமதி இன்றி அண்ணாசாலை, மறைமலை அடிகள் சாலை உள்ளிட்ட பகுதிகளில்
பேனர்கள் மற்றும் கட்டவுட்கள் வைக்கப்பட்டுள்ளதாக விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் மீது 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

அதன் படி, நகரப்பகுதியில் உள்ள உதயம் பகுதி காவல்நிலையம், முத்தியால்பேட்டை, காலாப்பட்டு உள்ளிட்ட காவல் நிலையங்களில் ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மேலும், அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருப்பதற்குள் ராட்சத பேனர்களை மாநகராட்சி அதிகாரிகள் அகற்ற வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.