நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் பிசியாக நடித்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர். மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்துவருகிறார். சிலம்பரசனும், கவுதம் மேனனும் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் ‘வெந்து தணிந்தது காடு’ ரிலீசுக்கு தயாராக உள்ளது.
அடுத்ததாக பத்து தல படத்திலும் நடிக்க உள்ளார். மேலும் ஹன்சிகாவின் 50வது படமான மஹா படத்தில் சிம்பு நடித்துள்ளார். மஹா படத்தில் சிம்பு சிறப்புத் தோற்றத்தில் 40 நிமிடங்களில் நடித்துள்ளார் . பலமுறை தள்ளிப்போன மஹா திரைப்படம் ஜூலை 22 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப்படத்தில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்துள்ளார். குழந்தையை துளைத்துவிட்டு தேடுவதையை கதைக்களமாக கொண்டுள்ளனர். இந்த திரைப்படத்தில் நாசர், கருணாகரன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்து உள்ளன.
இரவின் நிழல் ஹீரோயினா இது? செம மாஸான போட்டோவா இருக்கே!
சிம்புவின் படத்தை வரவேற்கும் விதமாக மதுரை குருவிக்காரன் சாலைப் பாலத்தின் மீது மதுரை சிட்டி எஸ்.டி.ஆர் வெறியர்கள் என்ற ரசிகர் அமைப்பின் சார்பாக 1000 அடிக்கு பிளக்ஸ் பேனரை அதிகாலை வைத்துள்ளனர், அதை ட்ரோன் கேமிராக்கள் மூலம் படம் பிடித்து அதனை சமூக வலைதளத்தில் பதிவேற்றி உள்ளனர். அந்த காட்சி தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி பரவி வருகிறது.