பேனர் வைப்பதில் மோதல்! சிவமொகாவில் 144 தடை உத்தரவு!

சிவமொகாவில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 144 தடை அமல்படுத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடுமுழுவதும் இன்றைய தினத்தில் 75வது சுதந்திர தின விழாவை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் கர்நாடக மாநிலத்திலும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் சுதந்திர தினத்திற்காக வைக்கப்பட்டிருந்த பேனரில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டவர்களான வீரசவர்க்கார் மற்றும் திப்புசுல்தான் படங்களை வைப்பதில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதற்கு காரணமாக சிவமொகாவில் 144 தடை அமல்படுத்த பட்டதாக கூறப்படுகிறது. அதோடு அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருப்பதற்காக அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment