News
டிக் டாக்கை தடை செய்த கூகுள்
டிக் டாக் என்ற செயலி சில வருடங்களாக ஸ்மார்ட் போனில் மிக பிரபலம் ஆனது. ஆரம்பத்தில் சினிமா வசனங்களுக்கு ஏற்ப நடிக்க உருவாக்கப்பட்ட இந்த செயலி போக போக சமூக சீர்கேடாகி போனது.

ஆபாச பாடல்களுக்கு பெண்கள் ஆடுவதுதான் மிகப்பெரும் தவறாக இந்த டிக் டோக்கில் பார்க்கப்படுகிறது.
இது போல நிகழ்வுகளை கண்டித்து எம். எல்.ஏ தமிமுன் அன்சாரி சட்டசபையில் பேசினார். இந்த செயலியை தடை செய்ய வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்த தகவல் தொழில் நுட்ப அமைச்சர் மணிகண்டன் செயலி தடை செய்யப்படும் என்று சொன்னார்.
அப்படி இருந்தும் செயலியை தடை செய்யவில்லை.
இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்றத்திற்கு இதை பொது நல வழக்காக எடுத்து சென்றார். மதுரை கோர்ட் இந்த செயலியை தடை செய்ய உத்தரவிட்டது. தொடர்ந்து இதை எதிர்த்து டிக் டாக் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
உச்ச நீதிமன்றமும் மதுரை கோர்ட் உத்தரவை அமல்படுத்தியதால் மத்திய அரசு உத்தரவுப்படி கூகுள், ஆப்பிள் ப்ளே ஸ்டோர்களில் இந்த செயலி நீக்கப்பட்டுள்ளது.
