தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் ஒழிப்பு! சவாலான பணி – சுப்ரியா சாகு!

வளர்ந்து வரும் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப பிளாஸ்டிக் பயன்பாடு என்பது முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது. இதனை தடுக்க மாசு கட்டுப்பாடு வாரிய கடந்த சில மாதங்களுக்கு முன் உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருந்தது.

அதன் படி, நெகிழி தட்டுகள், டம்ளர்கள், ஸ்பூன்கள், உறிஞ்சு குழல்கள் மற்றும் கேரி பேக்குகள் போன்ற நெகிழிகளை கடைகளில் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிடப்பட்டு இருந்தது.

ரேஷன் கடைகளில் போலி பில்! – விற்பனையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை!!

இதனை மீறி பிளாஸ்டிக் விற்பனை செய்யும் பட்சத்தில் அபராதம் மற்றும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுப்பது சவாலான பணியாக இருப்பதாக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதே போல் 188 பிளாஸ்டிக் தொழிற்சாலைகளை மூட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

3 மணி நேரத்திற்கு கனமழை எச்சரிக்கை! வானிலை அப்டேட்!!

தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுப்பது சவாலான பணியாக உள்ளதாகவும், இதுவரையில் ரூ.12 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மதுரையில் கொடுத்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.