
தமிழகம்
ஆன்லைன் ரம்மிக்கு தடை-பரிந்துரைகளை அளித்தது நீதிபதி சந்துரு குழு!
தமிழகத்தில் தொடர்ந்து ஆன்லைன் ரம்மி கடுமையாகி தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இதனை தடுக்கும் விதமாக தமிழக அரசுக்கு பலரும் கோரிக்கை வைத்தனர்.
அதன் எதிரொலியாக உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த நிலையில் ஆன்லைன் ரம்மி தடை குறித்த பரிந்துரைகளை இன்றைய தினம் முதலமைச்சரிடம் குழு அளித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது பற்றிய பரிந்துரைகளை முதலமைச்சர் ஸ்டாலினிடம் அளித்தது நீதியரசர் சந்துரு குழு. ஆன்லைன் ரம்மி அவசர சட்டத்தில் இடம் பெற வேண்டிய பரிந்துரைகளை முதலமைச்சரிடம் அளித்தது நீதியரசர் சந்துருவின் குழு.
பரிந்துரை அறிக்கையை ஆய்வு செய்து விரைவில் அவசர சட்டம் பிறப்பிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஏற்படும் பாதிப்புகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. அவசர சட்டம் பற்றி மாலை அமைச்சரவையில் ஆலோசிக்க உள்ள நிலையில் பரிந்துரைகளை அளித்துள்ளது குழு.
