காய்கறி மார்கெட்டில் விற்பனையாகும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள்…!

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் தடைசெய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை மும்மூரம். நாள் ஒன்றுக்கு கோடி கணக்கில் பணம் புழங்குவதால் பெரும் குற்றச்சாப்பவம் அரங்கேறும் முன் போலீசார் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் 25 கடைகள் கொண்ட தினசரி காய்கறிகள் விற்பனை மார்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டில் உள்ள கடை ஒன்றை அப்பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சிலர் வாடகைக்கு எடுத்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் குறிப்பாக தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் தினசரி கோடி கணக்கில் விற்கப்பட்டு வருகிறது. கடைக்கு தேடி வரும் வாடிக்கையாளர்களிடம் அவர்களுக்கு தேவையான லாட்டரி எண்கள் மற்றும் அவர்களுடைய பெயர்களை எழுதிக்கொள்ளும் லாட்டரி விற்பனையாளர்கள் அதற்கான தொகையை பெற்றுக்கொள்கின்றனர்.

பின்னர் இறுதி முடிவு வெளிவந்ததும் லாட்டரி ஏஜெண்டுகள் அதிர்ஷ்டத்தில் வெற்றிபெற்றவர்களிடம் கமிஷன் தொகை போக மீத தொகையை வெளிமாநில லாட்டரி ஏஜெண்டுகளிடம் இருந்து மண்ணச்சநல்லூர் லாட்டரி ஏஜெண்டுகள் வாடிக்கையாளர்களுக்கு பெற்றுதருகின்றனர்.

மண்ணச்சநல்லூர் மையப்பகுதியில் நடைபெறும் இந்த சட்ட விரோதமான லாட்டரி சீட்டு விற்பனையால் நாள் ஒன்றுக்கு கோடி கணக்கில் பணம் புழங்குவதால் நாளைடைவில் பெரும் குற்றச்சம்பவம் அரங்கேறும் வாய்ப்புள்ளது. எனவே காவல்துறையினர் இதற்கு சிறப்பு கவனம் செலுத்தி களையெடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment