Connect with us

வாங்காத கடனை கேட்டு மிரட்டும் வங்கி..!! அதிர்ச்சியில் சின்னத்திரை தம்பதி.!!

cm

தமிழகம்

வாங்காத கடனை கேட்டு மிரட்டும் வங்கி..!! அதிர்ச்சியில் சின்னத்திரை தம்பதி.!!

வாங்காத கடனுக்காக தனியார் வங்கியில் இருந்து தொடர்ந்து மிரட்டல் வருவதாக சின்னத்திரை தம்பதியினர் சென்னை காவல் நிலையத்தில் புகார் அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சின்னத்திரை நடிகர்களான சென்னையை சேர்ந்த அஞ்சலி மற்றும் அவரது கணவர் பிரபாகரன் ஆகியோர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

அதில் அதில் தனது தந்தை 2020ஆம் ஆண்டு உயிரிழந்த நிலையில் அவர் மாதத் தவணையாக செல்போன் வாங்கியதாக கூறி தனியார் வங்கியிடம் இருந்து மிரட்டல் வருவதாக தெரிவித்துள்ளனர்.

அதோடு வழக்கறிஞர் மற்றும் போலீசார் பெயரில் தொடர்ந்து போன் செய்து மிரட்டுவதாக அவர்கள் கூறியுள்ளனர். வாங்காத கடனுக்கு பணம் கட்ட மிரட்டி வரும் தனியார் வங்கி மீது நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் கூறியுள்ளனர்.

வாங்காத கடனுக்கு பணம் கட்ட  தனியார் வங்கி மிரட்டல் விடுக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top