வங்கி ஊழியர்கள் 2 நாள் வேலைநிறுத்தம்.. வாடிக்கையாளர்கள் சுதாரித்து கொள்ள அறிவுறுத்தல்!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியா முழுவதும் வங்கி ஊழியர்கள் இரண்டு நாள் வேலை நிறுத்தம் நடத்த இருப்பதை அடுத்து வாடிக்கையாளர்கள் சுதாரிப்பாக முன்கூட்டியே வங்கி பணிகளை முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வு ஊதியத்தை புதுப்பித்தல், ஊதிய உயர்வு, அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யவுள்ளனர்.

ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய வங்கி வேலை நிறுத்தம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலை நிறுத்தத்தை முறியடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் ஆனால் வேலை நிறுத்தத்தில் ஊழியர்கள் உறுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து அகில இந்திய வங்கி பொதுச் செயலாளர் வெங்கடாஜலம் அவர்கள் கூறுகையில் வங்கி ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் எனவே வேலை நிறுத்தம் செய்வதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்றும் கூறியுள்ளார்

மேலும் ஊழியர்கள் பற்றாக்குறையால் வங்கி பணிகள் பாதித்து வருவதாகவும் எனவே காலியாக உள்ள இடங்களை நிரப்ப வேண்டும் என்றும் சம்பள உயர்வு வேண்டும் என்றும் இது குறித்து சங்கப் பிரதிநிதிகளை அழைத்து மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் திட்டமிட்டபடி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் நடைபெறும் என்றும் கூறியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக வங்கி வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே வங்கி பணிகளை முடித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.