வங்கி கொள்ளை! முக்கிய குற்றவாளி பரபரப்பு தகவல்!

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியில் சுமார் 20 கோடி மதிப்புள்ள தங்க நடைகல் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளியாக முருகன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

குறிப்பாக 72 மணி நேரத்தில் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டு உள்ளன. இதற்கிடையில் முக்கிய குற்றவாளியான முருகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன் படி, இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட பல நாட்கள் திட்டமிடப்பட்டு இருந்ததாகவும், கைதான சந்தோஷ், பாலாஜி, சக்திவேல் ஆகிய 3 பேரும் அனைவரும் ஒரே பள்ளியில் படித்த நண்பர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதோடு கொள்ளையடிப்பதற்காக முன்னதாக 10 நாட்களுக்கு மேலாக திட்டம் தீட்டி சம்பவத்தன்று காவலாளிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்தும், சிசிடிவி கேமராவில் ஸ்ப்ரே அடித்தும் வங்கியில் கொள்ளையடித்தாக தெரிவித்துள்ளார்.

மேலும், கொள்ளையடித்த பிறகு எளிதில் தப்பிவிடலாம் என்ற நோக்கத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டதாக பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment