Connect with us

வங்கி கொள்ளை; மேலும் 2.5 கிலோ தங்க நகைகள் மீட்பு!!!

robbed

தமிழகம்

வங்கி கொள்ளை; மேலும் 2.5 கிலோ தங்க நகைகள் மீட்பு!!!

சென்னை அரும்பாக்கத்தில் நடைப்பெற்ற கொள்ளை சம்பவம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் ஒவ்வொரு நாளும் கைது நடவடிக்கை என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அதே போல் கொள்ளையடிக்கப்பட்ட தங்கத்தையும் போலீசார் மீட்டு வருகின்றனர். முதற்கட்டமான 31.7 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டதாக வங்கி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இருப்பினும் மொத்தமாக எவ்வளவு தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது என்ற விவரம் குறித்து அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் சந்தோஷ் என்ற கொள்ளையன் பாட்டி வீட்டில் 2.5 கிலோ தங்கம் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சோதனை நடத்தியதில் 2.5 கிலோ தங்கம் இருப்பதை கண்டுப்பிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், சென்னை அரும்பாக்கம் கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்ட காவல் ஆய்வாளர் அமல்ராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top