Connect with us

ஏப்ரல் மாதத்தில் பாதி மாதம் விடுமுறையா? குஷியில் வங்கி ஊழியர்கள்!

வங்கி விடுமுறை நாட்கள்

செய்திகள்

ஏப்ரல் மாதத்தில் பாதி மாதம் விடுமுறையா? குஷியில் வங்கி ஊழியர்கள்!

ஏப்ரல் மாதத்தில் பாதி மாதம் விடுமுறையா? குஷியில் வங்கி ஊழியர்கள்!

தற்போது ஏப்ரல் மாதத்தில் வங்கிகளுக்கான விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் மாதத்தில் உள்ள 30 நாட்களில் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஏப்ரல் 1ஆம் தேதி வங்கி கணக்குகளின் வருடாந்திர மூடல் அனைத்து மாநிலங்களிலும் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 2ஆம் தேதி தெலுங்கு புத்தாண்டு காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை அளிக்கப்படுகிறது. நாலாம் தேதி ரஞ்சி வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 5ஆம் தேதி ஹைதராபாத் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பதாம் தேதி சனிக்கிழமை மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை என்பதால் அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பத்தாம் தேதி ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.

14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு மற்றும் அம்பேத்கர் ஜெயந்தி  காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 15 ஆம் தேதி புனித வெள்ளி காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

16ஆம் தேதி கௌகாத்தி வங்கிகளுக்கு  மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 21ஆம் தேதி கடியா பூஜை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

23ஆம் தேதி 4-வது சனிக்கிழமைகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 24ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 29ஆம் தேதி ஜம்மு மற்றும் காஷ்மீர் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏப்ரல் மாதத்தில் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top