வங்கிகளில் பணமோசடி: ஒவ்வொரு நாளிலும் ₹100 கோடி இழப்பு? அதுவும் பாதிக்குமேல் இந்த மாநிலத்தில்தான்!
தற்போது மோசடியானது அதிக அளவில் நிகழ்ந்து கொண்டு வருகிறது. நூதனமான முறைகளில் நிகழ்த்தப்படுகிறது. இந்த நிலையில் அதிக அளவு மோசடி செயல்கள் வங்கிகளில் தான் காணப்படுகிறது.
இதனால் இவ்வளவு இழப்பு ஏற்படுகிறது. அதன்படி இந்தியாவில் நடைபெறும் வங்கி மோசடிகளால் தினசரி ரூபாய் 100 கோடி இழப்பு ஏற்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. 2015 முதல் 2021 ஆம் ஆண்டு ஆண்டு வரை சுமார் 7 ஆண்டுகளில் வங்கி மோசடிகள் 2.5 லட்சம் கோடிக்கு இழப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வங்கி மோசடிகளில் பாதிக்கும் மேற்பட்டவை மகாராஷ்டிராவில் மட்டும் நடைபெறுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. வங்கி மோசடி தொகையில் மகாராஷ்டிரா, டெல்லி, தெலுங்கானா, குஜராத், தமிழகத்தின் பங்கு மட்டும் கிட்டத்தட்ட 83% ஆக காணப்படுகிறது.
கண்காணிப்புகளால் வங்கி மோசடிகள் 7 ஆண்டுகளில் படிப்படியாக குறைந்து வருவது புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது. அதன்படி 2015- 16 ஆம் ஆண்டு ரூபாய் 67 ஆயிரத்து 760 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது.
2016- 17 ஆம் ஆண்டு ரூபாய் 59 ஆயிரத்து 966 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. 2019- 20 ஆம் ஆண்டில் ரூபாய் 27 ஆயிரத்து 698 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. 2020-2021 ஆம் ஆண்டில் ரூபாய் 10 ஆயிரத்து 629 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.
2021- 2022ம் ஆண்டு மட்டும் 647 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது முதல் 9 மாதம் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது. முறையான பராமரிப்பு, தவறு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
