இன்றும் நாளையும் திட்டமிட்டபடி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்! திமுக முழு ஆதரவு;

திட்டமிட்டபடி நாடு முழுவதும் இன்று மற்றும் நாளையும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் நடைபெறும் என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க ஒன்றிய அரசு செய்யும் முயற்சிகளை எதிர்த்து வங்கி ஊழியர்கள் இரண்டு நாட்களுக்கு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒன்றிய அரசு தரப்பின் வங்கி ஊழிய சங்கத்திடம் பேசிய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் திட்டமிட்டபடி இன்றும் நாளையும் வேலை நிறுத்தம் நடைபெறும் என்று வங்கி ஊழியர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

10 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் 90 ஆயிரம் ஊழியர்கள் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக 500 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நிறுத்த வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தில் பொதுப்பணித்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது குறித்தான வங்கிகள் சட்டத் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ளது என்று ஊழியர்கள் புகார். இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு திமுக முழு ஆதரவு அளித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment