ஒரு பெரிய மனுஷன் பண்ற வேலையா இது.. இந்தியப் பெண்ணுடன் வாட்ஸ் ஆப்பில் மோசமான உரையாடல் நடத்திய வங்கதேச தூதரக அதிகாரி!
இந்தியாவில் உள்ள வங்காளதேசத்தின் துணை தூதரக அலுவலகத்தின் முதன்மை செயலாளர் முகமது சனியூல் காதர் இந்தியப் பெண்ணுடன் மோசமான உரையாடல் நிகழ்த்திய சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள வங்காளதேசத்தின் துணை தூதரக அலுவலகத்தில் பணிபுரிபவர் முகமது சனியூல் காதர்.
இவர் இந்திய நாட்டைச் சார்ந்த பெண் ஒருவருடன் பழகி வந்ததாகவும் மேலும் அவரின் எண்ணைக் கண்டுபிடித்து பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பில் பாலியல் ரீதியாக மோசமான உரையாடல் செய்துள்ளார்.
முகமது சனியூல் இந்தியப் பெண்ணுடன் பழகி வருவதை துணை உயர் ஆணையத்தின் அதிகாரி ஒருவர் தெரிந்து கொண்டுள்ளார்.
மேலும் இதுகுறித்த புகாரினை அவர் அளித்ததையொட்டி வங்காள தேச வெளியுறவுத்துறை அமைச்சகம் முகமது சனியூலை அழைத்து விசாரித்துள்ளது.
விசாரணையில் சனியூல் உண்மையை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து 24 மணி நேரத்தில் தூதரக அதிகாரி முகமது சனியூல் காதர் கொல்கத்தாவை விட்டு வெளியேறி நாடு திரும்ப உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து சனியூல் இந்தியாவில் இருந்து வங்காள தேசம் சென்றடைந்துள்ளார்.
