முதல் பந்திலேயே விக்கெட்.. 400 ரன்களை கடக்க உதவிய அஸ்வின்: ஸ்கோர் விபரம்

இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கிடையே முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி 404 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து உள்ளது. இதனை அடுத்து வங்கதேச அணி பேட்டிங் செய்த நிலையில் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

bang vs ind1 இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது என்பதும், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்னில் அவுட் ஆனாலும் புஜாரா மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகிய இருவரும் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர். அதுமட்டுமின்றி கடைசி நேரத்தில் அஸ்வின் அதிரடியாக விளையாடி 58 ரன்கள் எடுத்ததால் இந்திய அணி 404 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது .

bang vs indஇந்த நிலையில் சற்று முன் வங்கதேச அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நிலையில் முதல் ஓவரின் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தது. சற்றுமுன் வரை அந்த அணி 3 ஓவர்களில் 4 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.