பெங்களூரு சொதப்பல் பேட்டிங்: சென்னை அணிக்கு இலக்கு எவ்வளவு?

d3bc1e8a6daa85eca46a07f5016dbe65

இன்று நடைபெற்ற சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 156 ரன்கள் எடுத்துள்ளது

இதனை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் 157 ரன்கள் என்ற இலக்கை நோக்கி சென்னை அணி விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதனை அடுத்து பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் முதல் விக்கெட் 111 ரன்களுக்கு தான் விழுந்தது என்பதை அடுத்து பெங்களூர் அணி 200 ரன்களை எட்டி விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது

ஆனால் சென்னை அணி பந்து வீச்சாளர்களின் அதிரடி காரணமாக அடுத்தடுத்து விக்கெட்டை இழந்த பெங்களூர் அணி 20 ஓவர்களில் 156 ரன்கள் மட்டுமே எடுத்தது என்பது குறிபிடத்தக்கது.

ஸ்கோர் விபரம்:

விராத் கோஹ்லி: 53
படிக்கல்: 70
டிவில்லியர்ஸ்: 12
மேக்ஸ்வெல்:11
டிம் டேவிட்: 1
ஹர்ஷல் பட்டேல்: 3

சென்னை அணியின் பிராவோ 3 விக்கெட்டுக்களையும், ஷர்துல் தாக்கூர் 2 விக்கெட்டுக்களையும், தீபக் சஹார் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...