வலியில்லாமல் தற்கொலை செய்து கொள்ள இணையத்தை தேடிய எஞ்சினியர்: பரிதாப மரணம்!

வலி இல்லாமல் தற்கொலை செய்துகொள்வது எப்படி என இணையத்தில் தேடி அதன்படி தற்கொலை செய்துகொண்ட இன்ஜினியர் ஒருவரின் பரிதாப மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்திலுள்ள பெங்களூரை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் விஜயகுமார் என்பவர் இதய நோயால் கடந்த சில நாட்களாக வாதிக்கப்பட்டு வந்தார். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதை அடுத்து எவ்வளவு சிகிச்சை பெற்றும் அவர் குணமாகவில்லை.

இதனை அடுத்து அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து இணையதளங்களில் வலி இல்லாமல் தற்கொலை செய்வது எப்படி என்பது குறித்து அவர் ஆய்வு செய்தார். அதன்பிறகு பூட்டப்பட்ட காரில் கேஸை திறந்துவிட்டால் வலி இல்லாமல் இறந்து விடலாம் என்று இணையத்தில் கூறப்பட்டதை அடுத்து அவர் சாலையோர பூங்கா முன்னர் தனது காரை நிறுத்தி அவ்வழியாக சென்ற ஒருவரிடம் காசு கொடுத்து கதவை மூடி லாக் செய்யும்படி கூறியுள்ளார்.

பின்னர் கார் கண்ணாடி மூடிவிட்டு கேஸை திறந்து மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார். இறப்பதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன் அவர் தனது மனைவிக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து விட்டேன் என்றும் நீங்கள் நன்றாக இருங்கள் என்றும் கூறிவிட்டு செய்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.