டிசம்பர் 28ஆம் தேதி முழு அடைப்பு: அதிமுக அறிவிப்பு

புதுச்சேரியில் டிசம்பர் 28ம் தேதி முழு அடைப்பு என அம்மாநில அதிமுக அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே ஆட்சி அமைந்தபோது மாநில வளர்ச்சி பாதிக்கப்படாமல் இருந்தது என்றும் ஆனால் வெவ்வேறு கட்சிகள் ஆட்சி அமைந்தபோது இரு ஆட்சிகளின் கண்ணோட்டத்தில் புதுச்சேரி பின்னுக்கு தள்ளப்பட்டது என்றும் துணை ஆளுநர் மற்றும் போது முதல்வர் மோதல் தொடர்ந்து இருக்கும் நிலையில் நிர்வாகம் ஸ்தம்பிக்கும் அளவுக்கு ஜனநாயகம் காலில் போட்டு மிதிக்கபட்டதாகவும் அதிமுக புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தேவை என்ற முடிவை 1998-ஆம் ஆண்டு ஜெயலலிதா எடுத்தார் என்றும் மத்தியில் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அதை வலியுறுத்தினார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் அதன் பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் மாநில அந்தஸ்து முயற்சி கைவிடப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஆட்சியில் இருந்தாலும் துணைநிலை ஆளுநர் ஆளுநருடன் கருத்து வேறுபாடு காரணமாக பல திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை என்றும் இதனால் அரசுக்கு மக்கள் மத்தியில் அவப்பெயரை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.