இட்லி, தோசைக்கு வாழைப்பூ வைத்து புதுவிதமான துவையல்!

பொதுவாக வாழைப்பூவில் கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம்,இரும்பு சத்து, தாமிர சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் பி1 என அனைத்து சத்துக்களும் உள்ளது. இந்த சத்துக்கள் இரத்தமூலத்தை சரி செய்ய பெருதும் உதவுகிறது.

வாழைப்பூ துவையல் தேவையான பொருட்கள்:

வாழைப்பூ – 1

கடலைப் பருப்பு – 1 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் – 4

துருவிய தேங்காய் – கால் கப்

உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி

புளி – எலுமிச்சை அளவு

எண்ணெய் – 3 தேக்கரண்டி

கடுகு – 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை – சிறிதளவு

உப்பு – சுவைக்கு ஏற்ப

பெருங்காயத்தூள் – சிறிதளவு

ஹோட்டல் ஸ்டைல் மணமணக்கும் கடாய் மஷ்ரூம் சாப்பிடணுமா? இதோ பாருங்க..

செய்முறை விளக்கம் :

முதலில் வாழைப்பூவில் உள்ள தேவையற்ற காம்புகளை நீக்கி சுத்தம் செய்து மோரில் போட்டு வைக்கவும், அப்போது தான் சமைக்கும் வரை வாழைப்பூ கருகாமல் இருக்கும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, பெருங்காயத்தூள், புளி, காய்ந்த மிளகாய் சேர்த்து ஒன்றாக வதக்கவும். அடுத்து அதை மற்றோரு பாத்திரத்தில் மாற்றி ஆற வைக்கவும்.

பின்பு ஒரு வாணிலியில் வாழைப்பூவை தனியாக வதக்க வேண்டும். முதலில் ஆற வைத்த கடலைப் பருப்பை தேங்காயை அரைத்துக்கொள்ளுங்கள்.

அடுத்து கடைசியாக வாழைப்பூ, சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து அரைக்கவும் ,பின்பு கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து துவையலில் கொட்டி கலந்து விடவும். இப்போது சுவையான வாழைப்பூ துவையல் தயார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews