விடுமுறை நாளில் குட்டிக்கு இப்படி ஒரு ஸ்வீட் பண்ணிகொடுங்க! வாழைப்பழ அல்வா செய்முறை!

நம்ம வீட்டுல இருக்குற செல்ல குட்டிஸ்க்கு அவங்களுக்கு விருப்பமான மற்றும் சத்தான ஸ்வீட் பண்ணிகொடுக்கலாமா..

தேவையான பொருட்கள் :

முந்திரி – 5
சோள மாவு – 5 தேக்கரண்டி
பாதாம் – 5
நெய் – 6 தேக்கரண்டி
சர்க்கரை – 1 கப்
வாழைப்பழம் – 8

தீபாவளி ஸ்பெஷல் ஜிலேபி எப்படி செய்யனும் தெரியுமா?

செய்முறை :

★முதலில் வாழைப்பழத்தை மிக்ஸியில் சேர்த்து மைய அரைத்துக்கொள்ள வேண்டும்.

★பின் வானலியை அடுப்பில் வைத்து நெய்விட்டு சூடானதும், பொடியாக நறுக்கி வைத்த பாதாம், முந்திரியை வறுத்து தனியாக வைக்க வேண்டும்.

★அதை வானலியில் நெய் விட்டு வாழைப்பழ விழுதையும் நன்கு கிளறி கொள்ள வேண்டும்.

★வாழைப்பழம் பேஸ்ட் பதத்திற்கு வந்ததும், சர்க்கரை சேர்த்து நன்றாக கரைத்து கிளற வேண்டும்.

★அடுத்து ஒரு கிண்ணத்தில் சோளமாவு, தண்ணீருடன் சேர்த்து வாழைப்பழத்தையும் சேர்த்து கிளற வேண்டும். இடையிடையே நெய் சேர்த்துக் கொள்ளவும்.

★இறுதியாக அல்வா பதத்துக்கு வந்ததும் உடனே வறுத்த பாதம், முந்திரியை சேர்த்து இறக்கினால் வாழைப்பழம் அல்வா தயாராகி விடும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment