Connect with us

விஜய் அபாரதத்திற்கு தடை: இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு

Tamil Nadu

விஜய் அபாரதத்திற்கு தடை: இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு

5a2bb31d85a85eadacace2bb41b5ff69-1

நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்ட ஒரு லட்ச ரூபாய் அபராதம் மற்றும் விஜய் குறித்து தனி நீதிபதி சுப்பிரமணியம் கூறிய கருத்துக்கள் ஆகியவற்றுக்கு இடைக்கால தடை விதித்து இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
நடிகர் விஜய் வாங்கிய வெளிநாட்டு கார் குறித்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பளித்த நீதிபதி சுப்பிரமணியம் அவர்கள் விஜய்க்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்தார். மேலும் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய சில கருத்துகளையும் அவர் தெரிவித்தார் 

இந்த நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் தன்னை பற்றி கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்களை நீக்கவேண்டும் என்று கூறி விஜய் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு இன்று இரண்டு நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின்போது விஜய்யின் வழக்கறிஞர் காரசாரமாக வாதாடினார் என்பதும் விஜய்க்கு வரி விதிக்கப்பட்டால் அதனை ஒரு வாரத்தில் கட்ட தயாராக இருப்பதாகவும் விஜய் குறித்து தனி நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருப்பது தேவையில்லாதது என்றும் ஆயிரக்கணக்கானோர் வரி விலக்கு கேட்டு வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் விஜய்யை மட்டும் விமர்சனம் செய்தது ஏன் என்றும் தெரிவித்தார் 

இந்த நிலையில் இந்த வழக்கில் தனி நீதிபதியின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இதனை அடுத்து அவருக்கு விதிக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் அபராதத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top