சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அனுப்பிய சம்மனில் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
2011-14 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அத்துறையில் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்குகள் எம்.பி மற்றும் எம்.எல்.ஏ க்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் இவ்வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்து இருப்பதாக கூறி அமலாக்கப்பிரிவு விசாரணை மேற்கொண்டனர்.
சம்மந்தமாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் இந்த மோசடியில் சம்மந்தப்பட்ட சண்முகம் என்பவரை 9- ஆம் தேதியும், செந்தில் பாலாஜி சகோதரர் சசோக் என்பவர் 12- ஆம் தேதியும் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜியை 13 ஆம் தேதி ஆஜராக அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது.
இந்த சம்மனை எதிர்த்து சண்முகம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இந்த வழக்கின் விசாரணை எந்த வழக்கில் கீழ் நடத்துகின்றீர்கள் என்றும் சம்மனை தள்ளுபடி வழக்கு தொடரப்பட்ட நிலையில் அமலாக்கப்பிரிவு அனுப்பியுள்ள சம்மனை இடைக்கால தடை விதித்து உயர்நீதி மன்றம் இவ்வழக்கை தள்ளிவைத்துள்ளனர்.