கோயில்களுக்குள் யாகங்கள் நடத்த கூடாது – ஐகோர்ட் கிளை அதிரடி!!

தூத்துக்குடி பாஜக மாவட்ட செயலாளர் சித்ரங்க நாதன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார். அதில் திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா அக்டோபர் 5 முதல் 30 வரையில் நடைப்பெறும்.

இந்நிலையில் திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவில் கோயில் உள் பிரகாரத்தில் தங்கி பக்தர்கள் விரதம் இருப்பது வழக்கம். ஆனால் நடப்பாண்டில் பக்தர்கள் தங்கி விரதம் இருப்பதற்கு அனுமதியில்லை.

இதன் காரணமாக பிரகாரத்தில் தங்கி பக்தர்கள் விரதம் இருப்பதற்கு இடம் ஒதுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இந்த மனு மீதான விசாரணை அமர்வானது இன்று வந்தது.

உகாண்டாவில் வேகமெடுக்கும் எபோலோ வைரஸ்!! 30 பேர் பலி!!

அப்போது திருச்செந்தூர் கோயில் தனியார் கையில் இருப்பதாகவும், திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவில் கோயில் உள் பிரகாரத்தில் தங்க அனுமதி இல்லை என்ற நிலைப்பாடு மிக சரியானது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

அதே போல் திருச்செந்தூர் முருகன் கோயிலில் பணம் கொடுத்தால் நேரடியாக கடவுளை தரிசிக்கலாம் என்பது வேதனை அளிப்பதாகவும் தமிழகத்தில் உள்ள கோயில்களின் உள் பிரகாரத்தில் யாகங்கள் நடத்த தடை விதிக்கப்படுவதாக தெரிவித்தனர்.

தீபாவளி சிறப்பு பேருந்து – தமிழகத்தில் ரூ.9 கோடி வசூல்!!

மேலும், கோயில்கள் குறித்து முறையான வழிகாட்டுதலை அரசு பிறப்பிக்க வேண்டும், தவறும்பட்சத்தில் நீதிமன்றமே உரிய வழிகாட்டுதலை பிறப்பிக்கும் என கூறி வழக்கு விசாரணையை நவம்பர் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment