Connect with us

கோவில் திருவிழாக்களில் மது விற்க தடை!! – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

tasmac wines

தமிழகம்

கோவில் திருவிழாக்களில் மது விற்க தடை!! – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

கோவில் திருவிழாக்களில் இரவு நேரங்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதிக்க வேண்டுமென மதுரை, மணப்பாறை, திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த அனைத்து மனுக்களையும் ஒன்றாக விசாரித்த நீதிபதி கோவில் திருவிழாக்கள் கடைபிடிக்கவேண்டிய, நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து உத்தரவு ஒன்றையும் பிறப்பித்துள்ளார்.

அந்த வகையில் கோவில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் இரவு 7 மணி முதல் 10 மணி வரையில் மட்டுமே நடைபெற வேண்டுமென்றும் ஆபாசமான நடனம் இருக்க கூடாது என கூறியுள்ளார்.

அதேபோல் அரசியல் சம்பந்தமான பாடல் மற்றும் நடனம் ஆடுவதற்கு அனுமதி அளிக்ககூடாது எனவும் சாதி தொடர்பான பேனர்கள் எதுவும் வைக்கக்கூடாது என கூறியுள்ளது.

இதனையடுத்து நிகழ்ச்சியில் பங்கேற்புகளாக குட்கா, மதுபானம் விற்பனை செய்யக்கூடாது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top