புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க Paytm-க்கு தடை – ரிசர்வ் வங்கி அதிரடி !!

பேடிஎம் வங்கியில் கண்காணிப்பு பிரச்சினைகள் கண்டறியப்பட்டுள்ளதால் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க  பேடிஎம் வங்கிற்கு  ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:

புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பதற்கு பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கிக்கு உடனடியாக தடை விதிப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இதனிடையே பேடிஎம் வங்கியின் ஐடி அமைப்பை தணிக்கை செய்ய ஐடி தணிக்கை நிறுவனம் ஒன்றை நியமிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், தகவல் தொழிழ்நுட்ப பிரிவின்  தணிக்கை ஆய்விற்கு பின் வாடிக்கையாளர்களை  சேர்க்க ரிசர்வ் வங்கியிடம் உரிய அனுமதி பெற்று சேர்க்க வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment