Connect with us

ஆன்லைன் ரம்மிக்கு தடை? முத்தரசன் அதிரடி கருத்து…

rummy

செய்திகள்

ஆன்லைன் ரம்மிக்கு தடை? முத்தரசன் அதிரடி கருத்து…

தமிழக முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்வது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்போடு மக்கள் காத்திருக்கின்றனர்… புதுக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்

புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறுகையில் தமிழக முதலமைச்சர் தலைமையில் இன்று மாலை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான மிக முக்கியமான அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கின்றோம், ஏற்கனவே இதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டு அவர்களும் தங்கள் அறிக்கையை அரசுக்கு அளித்து விட்டார்கள்

இந்நிலையில் முதல்வர் தலைமையில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்திற்கு பின் ஆன்லைன் ரம்மிக்கு தடை வரும் என மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் இது குறித்து நல்ல முடிவை தமிழக முதலமைச்சர் அறிவிக்க வேண்டும் என்று முத்தரசன் கூறினார்.

மேலும் அவர் இதேபோல் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரிழப்பில் மர்மம் இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை குழுவின் அறிக்கையும் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்தும் உரிய முடிவு எடுப்பார்கள் என மக்கள் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர் இந்த விவகாரத்தில் ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினர் தான் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளதாக பெரும் பிரச்சனையை எழுப்பியவர்கள் என்று கூறினார்.

சாதாரண மக்களுக்காக அளிக்கப்படும் சலுகைகளை இலவச திட்டம் என கொச்சைப்படுத்தக் கூடாது மக்கள் இலவசங்களை பெறுவதற்காக கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டதே தற்போதைய மோடி ஆட்சியின் தவறான கொள்கைகளால் தான் என்றும் கடந்த எட்டு ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவில் உள்ள 20 கோடி மக்களை பசியால் வாடும் சூழலுக்கு மோடி அரசாங்கம் தள்ளி விட்டதாகவும்

அவர்கள் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்றும் ஏழை நடுத்தர சாதாரண மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு வழங்கி உள்ள பெண்களுக்கான இலவச பேருந்து உள்ளிட்ட சலுகைகள் பயனுள்ளவை தான் என்றும் இதனை கொச்சைப்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்றும் முத்தரசன் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top