தமிழக கடற்கரையில் ஒன்றுகூடி புத்தாண்டு கொண்டாட தடை! மது அருந்தி வாகனம் ஓட்டினால் கைது!: டிஜிபி

புத்தாண்டு வர இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் உலக நாடுகள் பலவும் அலங்கரித்துக் கொண்டு வருகின்றன. ஆனால் இந்தியாவில் உள்ள ஒரு சில மாநிலங்கள் புத்தாண்டு கொண்டாட தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே ஒமைக்ரான் பரவல் அதிகமாக காணப்படுகிறது.

புத்தாண்டு

இதனால் இந்தியாவில் உள்ள சில மாநிலங்களில் புத்தாண்டு தினத்தை கொண்டாடுவதற்கு பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் கடற்கரைகளில் புத்தாண்டை கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கடற்கரைகளில் டிசம்பர் 31ஆம் தேதி இரவு பொதுமக்கள் கூடி புத்தாண்டை கொண்டாடுவதற்கு டிஜிபி தடை விதித்துள்ளார்.

கடற்கரைகளில் புத்தாண்டை கொண்டாட அனுமதி இல்லாததால் அனைவரும் புத்தாண்டை அவரவர் குடும்பத்தினருடன் வீடுகளிலேயே கொண்டாடுங்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளார். டிசம்பர் 31-ஆம் தேதி மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோர் கண்டிப்பாக கைது செய்வதுடன் மட்டுமில்லாமல் அவர்களின் வாகனமும் பறிமுதல் செய்யப்படும் என்றும் டிஜிபி கூறினார்.

நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் இருசக்கர வாகன பயணத்தை தவிர்த்து அல்லது பேருந்தில் பயணிக்கலாம் என்றும் கூறினார். காரில் நீண்ட தூரம் செல்வோர் மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை நிறுத்தி தேநீர் அருந்தி விட்டு செல்லலாம் என்றும் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment