பள்ளி ஆண்டு விழாவில் சினிமா பாடல்களுக்கு தடை – பள்ளிக்கல்வித்துறை அதிரடி!!!

தமிழகத்தில் ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு எழுபத்தி ஏழு வகையான உத்தரவை பள்ளி கல்வித்துறை பிறப்பித்துள்ளது. அதன் படி, அரசு பள்ளி பிரச்சனைகள் குறித்து பத்திரிகையாளர்களிடம் ஆசிரியர்கள் சொல்ல கூடாது என கூறியுள்ளது.

அதேபோல் ஆசிரியர்கள் வகுப்பறையில் செல்போன் பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாணவர்கள் மோதிரம், செயின் போன்றவைகளை அணிய கூடாது என தெரிவித்துள்ளது.

பள்ளி துவங்குவதற்கு முன்னதாகவே அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டுமென்றும் என்று கூறியுள்ளது. மாணவர்களை சொந்த வேலைக்கு ஆசிரியர்கள் அனுப்ப கூடாது என கூறப்பட்டுள்ளது.

பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் அப்பகுதியில் இருக்கும் தொழிலதிபர்களை நேரில் சந்தித்து பள்ளிக்கு தேவையான உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்திற்குள் ஆண்டு விழா நடத்த வேண்டும் என்றும் அதில் சினிமா பாடல்களுக்கு அனுமதி இல்லை என கூறியுள்ளனர்.

மேலும், மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது பழுதான இடம் மற்றும் மரத்தடியில் அமர வைத்து பாடம் நடத்தக் கூடாது என கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment