Connect with us

அந்நிய மரக்கன்றுகளை வளர்க்க தடை!! உயர் நீதிமன்றம் உத்தரவு!!

seemai karuvela tree

தமிழகம்

அந்நிய மரக்கன்றுகளை வளர்க்க தடை!! உயர் நீதிமன்றம் உத்தரவு!!

தமிழகத்தில் அந்நிய மரக்கன்றுகளை வளர்த்து விற்க நர்சரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் பல ஆயிரக்கான ஏக்கர்களில் அன்னிய நாட்டு மரங்கள் இருந்து வருவதாகவும், இவற்றின் மூலம் நிலத்தடி நீர் மட்டம் படிப்படியாக குறையும் அபாயம் இருப்பதாக கூறி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

குறிப்பாக அந்நிய நாட்டு மரங்களினால் தமிழகத்தில் இருப்பதால் தண்ணீர் மட்டம் குறைந்து உணவு பற்றாக்குறை மற்றும் விலங்குகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்படும் என்பதால் வனப்பகுதிகளில் உள்ள அந்நிய மரங்களை அப்புறப்படுத்த வேண்டும் மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த வழக்கின் விசாரணை அமர்வானது இன்று வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள் தமிழகத்தில் அந்நிய மரக்கன்றுகளை வளர்த்து விற்க நர்சரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.

மேலும், இதற்கு அறிவிப்பாணையாக வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top