ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. குறிப்பாக கோதுமையின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இதனிடையே கோதுமை ஏற்றுமதி கொள்கையில் மத்திய அரசு மாற்றம் கொண்டுவந்துள்ளது. இந்தியாவின் உணவு பாதுகாக்கவும் மறுபுறம் அண்டை நாடுகளுக்கு தேவையான ஆதரவை வழங்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவின் உணவு சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிப்பதாக தெரிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் கோதுமையின் விலை அதிகரித்துள்ளதால் தற்போது தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில் இந்தியாவில் இருந்து கோதுமை ஏற்றுமதி செய்வதால் கோதுமை இருப்புக்கு பற்றாக்குறை ஏற்படும் என்றும் உள்நாட்டில் கோதுமை விலை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாடுகளில் இருந்து கோதுமை வேண்டும் என்று கோரிக்கை வைத்தால் அதனை பரிசீலனை செய்து அரசின் அனுமதி பெற்றவுடன் கோதுமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.