பதஞ்சலி உட்பட 16 மருந்துகளுக்கு தடை; நேபாள அரசு அதிரடி!!

இந்தியாவில் தயாரிக்கப்படும் பதஞ்சலி உள்பட 16 மருந்து நிறுவனங்களுக்கு நேபாளத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கு ஆப்பிக்க நாடான ஜாம்பியாவில் கடந்த ஜூலை மாதத்தில் சளி, இருமல் போன்றவைகளுக்கு உட்கொண்ட மருந்துகளினால் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் சில இந்திய மருத்து நிறுவனங்களுக்கும் இதற்கு காரணம் என உலக சுகாதாரத்துறை அமைப்பு கூறியது.

இதனை தொடர்ந்து உலகம் முழுவதும் சளி, இருமல் தொடர்பாக அந்தந்த நாடுகளில் ஒழுங்குமுறை அமைப்புகள் ஆய்வு செய்துகொள்ள வேண்டும் என உலக சுகாதாரத்துறை அமைப்பு அறிவுறுத்தி இருந்தது.

அந்த வகையில் நேபாள அரசு மருத்து ஆய்வாளர்களை இந்திய மருந்து நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்தது. அப்போது நடத்தப்பட்ட ஆய்வில் பதஞ்சலி திவ்யா பார்மசி, ரேடியன்ட் பேரண்டரல்ஸ், மெர்க்குரி லேபரட்டரி, அல்லையன்ஸ் பயோடெக், கேப்டேட் பயோடெக், அக்லோ மெட், ஜீ லேபட்டரிஸ் போன்ற நிறுவனங்களின் மருத்துகளை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்தது.

அதே போல் டாஃபோடில்ஸ் ஃபார்மச்சூட்டிக்கல்ஸ், ஜிஎல்எல் ஃபார்மா, யுனிஜூல்ஸ் லைஃப்சைன்ஸ்,கான்சப்ட் ஃபார்மச்சூட்டிக்கல், ஸ்ரீ ஆனந்த் லைஃப்டைன்ஸ், ஐபிசிஏ லேபரட்டரி, மேக்குரி லேபரட்டரி உள்ளிட்ட மருந்துகளுக்கு தடை விதித்து அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

மேலும், உலக சுகாதாரத்துறையில் அறிவுறுத்தலின் படி, மருந்து தயாரிக்கும் முறைகளை சரியாக கடைபிடிக்காமல் இருந்ததால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக நேபாள அரசு தெரிவித்து உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.