Connect with us

பலூன் விற்பவர் TO ஃபேஷன் மாடல் !! பின்னணி என்ன?

News

பலூன் விற்பவர் TO ஃபேஷன் மாடல் !! பின்னணி என்ன?

பலூன் விற்பவர் TO ஃபேஷன் மாடல் !! பின்னணி என்ன?

கேரளாவில் பலூன் விற்கும் பெண் ஃபேஷன் மாடலாக மாறியது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அண்டலூர் கோவிலில் திருவிழா நடந்தது. இந்த திருவிழாவை காண ஏராளமான மக்கள் வருகை தந்தனர்.

இந்த திருவிழாவிற்கு சென்ற புகைப்படக் கலைஞர் அர்ஜுன் கிருஷ்ணன் என்பவர் பெண் ஒருவர் பலூன் விற்று கொண்டதை பார்த்தார்.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அந்த பெண்ணை புகைப்படத்திற்கு ஏற்றது இந்த முகம் என நினைத்து  விதவிதமாக புகைப்படம் எடுத்தார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்ய அந்த பதிவிற்கு நல்ல லைக்குகள் வந்துள்ளது.

இந்த புகைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை கண்டு மிரண்டு போன அர்ஜுன் கிருஷ்ணன் மீண்டும் அந்த பெண்ணை தேடி அவரை மாடலிங்காக மாற்றி புகைப்படம் எடுக்க தொடங்கினார்.

அதற்கு பெண்ணின் பெற்றோரும் ஒப்புக்கொண்ட நிலையில் ஒப்பனை கலைஞர்களுடன் கேரள ஸ்டைல், வெஸ்டன் ஸ்டைல் என விதவிதமாக அலங்காரம் செய்து புகைப்படங்களை எடுத்து பதிவேற்றம் செய்தார்.

இந்த புகைப்படத்திற்கு யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு வரவேற்பு கிடைத்தது. இதில் அந்த பெண் பல நிறுவனங்களுக்கும் ஒப்பந்தமாகிவிட்டார். புகைப்படக் கலைஞர் அர்ஜுன் கிருஷ்ணனுக்கு பல வாய்ப்புகள் கிடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in News

To Top