Entertainment
பாலாவின் அடுத்த படம் ஆரம்பம்… அதிகாரபூர்வ தகவல்!!!
இயக்குநர் பாலாவுக்கு தீவிர சினிமா ரசிகர்கள் ஏராளம் உண்டு. இந்நிலையில் இயக்குநர் பாலா தனது தயாரிப்பிலான அடுத்த படமான விசித்திரம் படம் தொடர்பாக மும்முரமாக பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்த படத்தில் பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் நடிக்கிறார்.
முன்னதாக தாரை தப்பட்டை உள்ளிட்ட பல படங்களில் ஆர்.கே.சுரேஷ் நடித்திருந்தார். இதில் தாரை தப்பட்டை திரைப்படம் சசிகுமார் வரலட்சுமி நடிப்பில் பாலா இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம்.
இதனிடையே 2018-ஆம் ஆண்டில் மலையாளத்தில் வெளியான ஜோசப் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கினை இயக்குநர் பாலா தமிழில் விசித்திரம் என்கிற பெயரில் தயாரிக்கிறார். எம்.பத்மகுமார் இயக்கும் இந்த படத்தில்தான் ஆர்.கே.சுரேஷ் நடிக்கிறார்.
பாலாவின் பி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தில் ஆர்.கே.சுரேஷ் இரட்டை வேடங்களில் நடிப்பதாக குறிப்பிடப் பட்டுள்ளது. கடந்த வருடமே இந்த படத்தின் டீசர் வெளியாகிய நிலையில் விரைவில் இந்தப் படம் வெளியாக இருப்பதாக தெரிகிறது.
இதனையடுத்து பாலாவுடன் பணிபுரியும் வீடியோ ஒன்றை ஆர்.கே.சுரேஷ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த ட்விட்டர் பதிவில் இயக்குநர் பாலா வழங்கும் விசித்திரன் விரைவில் வெளியாகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Director bala presents #visthiran coming soon ???? pic.twitter.com/Mtc5IAdKPN
— RK SURESH (@studio9_suresh) March 8, 2021
