பிக்பாஸ் வீட்டிற்கு வரும் பாலாஜி குரூப்: மீண்டும் கலகலப்பாகவும் பிக்பாஸ் வீடு

b17428c10d5839935f220724a8179d1a-1

பிக்பாஸ் வீட்டில் நேற்று அன்பு குரூப்பைச் சேர்ந்த அர்ச்சனா, நிஷா, ரமேஷ் மற்றும் ரேகா ஆகியோர் வந்தனர் என்பதும் இதனால் நேற்று முழுவதும் பிக்பாஸ் வீடு கலகலப்பாக இருந்தது என்பதும் தெரிந்ததே 

இந்த நிலையில் இன்று பாலாஜி குரூப்பை சேர்ந்த சுசித்ரா மற்றும் சம்யுக்தா ஆகிய இருவரும்  வருகை தரும் காட்சிகள் இன்றைய முதல் புரமோவில் உள்ளது. ஏற்கனவே பாலாஜியுடன் சுசித்ரா மற்றும் சம்யுக்தா ஆகிய இருவரும் நெருக்கமாக இருந்தனர் என்பதும் பாலாஜி பல இடங்களில் சம்யுக்தாவுக்கு ஆதரவு தந்தார் என்பதும் குறிப்பாக சம்யுக்தா கேப்டனாக பாலாஜிதான் முழு ஆதரவு கொடுத்தார் என்பதும் தெரிந்ததே

a176bf0bbff628c8a34db281b45103a7-2

சுசித்ரா மற்றும் சம்யுக்தாவின் வருகை பாலாஜிக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பதும் இருவரும் கலகலப்பாகவும் உணர்ச்சி மிகுதியால் கட்டிப்பிடித்து நெகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டிருக்கும் காட்சிகள் இன்றைய முதல் புரமோவில் இடம்பெற்று உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 

மேலும் இன்றைய அடுத்த புரமோவில் சனம்ஷெட்டி மற்றும் வேல்முருகன் உள்பட ஒரு சிலர் வரும் காட்சி இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.