டைட்டிலை வின் பண்ண ஆரி வழியை கடைபிடிக்கும் பாலாஜி!

f4e5964ec50c59935c06154f42037782

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் ஒவ்வொருவரும் என்ன செய்யப்போகிறார்கள் என்பது குறித்த கருத்தை கமல்ஹாசன் நேற்று கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது பாலாஜி தான் ஆரியிடம் பல விசயங்கள் பேசிக் கொண்டிருந்ததாகவும் அப்போது அவரிடம் இருந்து கிடைத்த ஒரு நல்ல விஷயம் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்பதை எடுத்துக் கொண்டேன் என்றும் கூறினார் 

எனவே நான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே சென்றதும் எனது சொந்த ஊருக்கு சென்று நிலம் வாங்கி விவசாயம் பண்ணுவேன் என்று பாலாஜி கூறியதை அடுத்து அனைவரும் அவரை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர் 

f42512f321b05cb9d32f5b1ab942b7e5

இதுவரை நடந்த 4 சீசன்களில் இந்த இது மாதிரி யாருமே கூறியது இல்லை என்றும் இது மிகப்பெரிய விஷயம் என்றும் கூறிய கமல்ஹாசன் பாலாஜிக்கு பாராட்டு தெரிவித்தார். ஏற்கனவே விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு விஷயங்களை ஆரி செய்த நிலையில் அதே வழியை பாலாஜியும் பின்பற்றுகிறார் என்றும் இது டைட்டிலை வின் பண்ண பாலாஜி செய்த தந்திரம் என்றும் கூறப்பட்டு வருகிறது

உண்மையாகவே பாலாஜி வெளியே வந்தவுடன் விவசாயம் செய்வாரா அல்லது டைட்டில் வின் செய்வதற்காக மக்களிடம் ஓட்டு வாங்குவதற்காக தந்திரம் செய்தாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.