Connect with us

இனிமேல் தாடி பாலாஜி இல்லை கேடி பாலாஜி! அல்டிமேட்டில் அல்டிமேட்டாக களம் இறங்கும் பாலாஜி;

bigg boss ultimate

பொழுதுபோக்கு

இனிமேல் தாடி பாலாஜி இல்லை கேடி பாலாஜி! அல்டிமேட்டில் அல்டிமேட்டாக களம் இறங்கும் பாலாஜி;

இனிமேல் தாடி பாலாஜி இல்லை கேடி பாலாஜி! அல்டிமேட்டில் அல்டிமேட்டாக களம் இறங்கும் பாலாஜி;

இந்தியாவிலேயே மிகப்பெரிய பிரம்மாண்ட நிகழ்ச்சி என்றால் பிக்பாஸ் நிகழ்ச்சிதான். இவை இந்தி, தெலுங்கு, தமிழ் போன்ற ஏராளமான மொழிகளில் ஒளிபரப்பாகி கொண்டு வருகிறது. அதிலும் நம் தமிழகத்தில் ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது.

குறிப்பாக பிக் பாஸ் சீசன் 5, இரண்டு வாரங்களுக்கு முன்புதான் நிறைவு பெற்றது. அதில் ராஜு வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி இல்லாமல் ரசிகர்கள் பெருத்த சோகத்தில் இருந்து நிலையில் அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் விதமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஜனவரி 30ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது.

இவை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இணையதளத்தில் 24 மணி நேரமும் கண்டு மகிழலாம் என்றும் கூறப்படுகிறது. இதில் கடந்த 5 சீசன்களில் போட்டியிட்ட பிக்பாஸ் போட்டியாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

ஏற்கனவே ஜூலி, அபிராமி, வனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் போட்டியாளராக உறுதிசெய்யப்பட்ட நிலையில், சுவாரசியமும் எதிர்பார்ப்புகளும் அதிகமாகவே காணப்படுகிறது.

இவர்கள் மத்தியில் பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளராக களமிறங்கி நகைச்சுவையோடும் சுறுசுறுப்போடும் வலம் வந்தவர் தான் நடிகர் தாடி பாலாஜி. அதிலும் பிக்பாஸ் 2 நடிகர் தாடி பாலாஜி மீது ஐஸ்வர்யா குப்பைகளை கொட்டினார்.

அதை மையமாக கொண்டு ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த ப்ரோமோவில் தாடி பாலாஜி இல்லை கேடி பாலாஜி என்று கூறியுள்ளார். இதனால் தாடி பாலாஜியும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளது உறுதியாகி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top