மார்க் கொடுக்கிறேன் பேரில் பிரச்சினையை கிளப்பி விட்ட பாலா! ஜூலிக்கும் அனிதாவுக்கும் சண்டையா?

ரசிகர்களை தன் வசம்  இழுத்துக் கொண்டு மிகவும் காரசாரமாக ஓடிக்கொண்டிருக்கிறது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி. இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கடந்த பிக்பாஸ் ஐந்து சீசன்களில் கலந்துகொண்டிருந்த போட்டியாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுவும் நாள்தோறும் பிக்பாஸ் அல்டிமேட் வீட்டில் சண்டைகளும் பேச்சுவார்த்தைகளும் முரண்பாடுகளும் நிகழ்ந்து கொண்டுதான் வருகிறது. இருப்பினும் சனி,ஞாயிறு கிழமை ஆனால் அனைவரும் ஒற்றுமையாக இருப்பது போல் காட்சி அளிப்பதும் தவிர்க்க முடியாததாகவே இந்த பிக்பாஸ் அல்டிமேட் வீட்டில் உள்ளது.

இந்த நிலையில் தற்போது புரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. புரோமோ கேப்டன்ஷிப் ரிப்போர்ட் கார்டு பற்றிய வீடியோவாக உள்ளது. அதில் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு பாலாஜி முருகதாஸ் அவர்களின் அந்த ஈடுபாட்டை குறித்து மதிப்பெண்கள் வழங்குகிறார்.

முதலில் அவர் தாமரைக்கு  மதிப்பெண்கள் குறித்து அது குறித்து விளக்கமளித்தார். பின்னர் நிருப்க்கு ஐந்து மதிப்பெண்கள் கொடுத்து அவரைப் பற்றியும் கூறினார். அபிராமிக்கு ஆறு மதிப்பெண்கள் வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியில் ஜூலியிடம் வரும் போது அவர் கூறிய கருத்து அந்த நேரத்திற்கு பின்பும் பிரச்சினையை கூடியதாக மாறியுள்ளது. ஏனென்றால் அவர் கூறியது அனிதாவிற்கு ஜூலிக்கும் இடையே பிரச்சனையை கிளப்பியுள்ளது. இதுகுறித்து அனிதா, ஜூலியிடம் பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.