மிகவும் கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது பிக்பாஸ் அல்டிமேட். பிக் பாஸ் அல்டிமேட் சீசன் 1-ல், பிக் பாஸ் சீசன்களில் கலந்துகொண்ட போட்டியாளர்களை பங்கேற்று உள்ளனர்.
இதில் நாள்தோறும் சண்டைகளும், காரசார பேச்சு வார்த்தைகளும் நிகழ்ந்து கொண்டு வருகிறது. அந்த வகையில் பிக்பாஸ் கால் ஒன்று செய்தது. அதனை எடுத்த பாலா பிக்பாஸிடம் சில மணிநேரம் பேசியுள்ளார்.
அதன்பின்னர் அங்குள்ள ஹவுஸ் மேடுகளை ஒன்றாக அமர வைத்து நீங்கள் இந்த வாரம் சரியாக டாக்ஸ் செய்யாததால் இந்த வாரம் டபுள் எரிக்சன் உள்ளதாக பிக்பாஸ் கூறினார் என்று பாலா கூறினார்.
அதனால் வரிசையாக ஒவ்வொருவரும் வந்து இந்தவாரம் எலிமினேட்டாக நினைப்பவர்களை பெயர் பட்டியலிட்டுக் கூறி வந்தனர். இறுதியில் பாலா அனைவருக்கும் டுஸ்ட் ஒன்றை வைத்தார். ஏனென்றால் இந்த விளையாட்டை பிக்பாஸ் கொடுக்கவில்லை நான்தான் சும்மா சொன்னேன் என்று கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த வனிதா பாலாவிடம் சண்டை போடுகிறார் .ஏனென்றால் வரிசையாக அனிதா வனிதா உள்ளிட்டோர் எலிமினேட்டாக நினைப்பவர்களின் பெயர்களை கூறியதால் இத்தகைய சண்டை நிகழ்ந்து கொண்டு வருகிறது.