சூடு பிடிக்கும் பாலா – சூர்யா கூட்டணி ! வணங்கான் படத்தின் மாஸ் அப்டேட் !

சூர்யா தனது வெற்றி இயக்குனர் பாலாவுடன் மீண்டும் இணைந்து தனது 41 வது படத்தில் நடித்துவருகிறார், இந்த படம் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகரையும் திரைப்படத் தயாரிப்பாளரையும் மீண்டும் இணைக்கிறது. இருவரும் இதற்கு முன்பாக நந்தா (2001) மற்றும் பிதாமகன் (2003) ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து பிரபலமடைந்தார் .பிறகு பாலாவுடன் இணைந்து வணங்கான் ,வாடிவாசல் ,சிறுத்தை சிவா கூட்டணியில் ஒரு படத்தில் என பிசியாக நடித்து வருகிறார். அடுத்தடுத்து ஞானவேல், சுதா கொங்கரா ஆகியோர் பல முன்னணி இயக்குனர்களுடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

FXYtANUagAAqfDh 1

பாலாவுடன் இணைந்து வணங்கான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன் தெலுங்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தலைப்புகளுடன் வெளியிடப்பட்டது.படத்தில் கிருத்தி ஷெட்டி மற்றும் மமிதா பைஜு முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் சூர்யாவும் இயக்குனர் சிறுத்தை சிவாவும் இணைந்து தற்காலிகமாக ‘சூர்யா 42’ என்ற புதிய திட்டத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களால் வைரலானது. சூர்யா 42’வது படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டு 10 மொழிகளில் வெளியாகும் மிகப்பெரிய அளவிலான திட்டமாகும்.

195198 thumb 665 1

சிம்புவின் வெந்து தணிந்தது காடு ட்ரெய்லர் – புதிய பதிப்பு வெளியிடு !

இந்நிலையில் கிடப்பில் கிடந்த பாலா – சூர்யாவின் கூட்டணி தற்போழுது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இயக்குனர் பாலா ‘வணங்கான்’ படத்தின் முழு ஸ்கிரிப்ட்டை உருவாக்காத காரணத்தால்தான் படத்தைத் தள்ளி வைத்தார்கள் சூர்யா என்பது நமக்கு தெரிந்ததே. இந்நிலையில் தற்போழுது ‘வணங்கான்’ படத்திற்கான பாடல் பதிவுகள் ஆரம்பமாகியுள்ளது என படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் ‘அப்டேட்’ கொடுத்துள்ளார்.

இந்த தகவல் சூர்யா ரசிகர்களை ம்,மகிழ்ச்சியை ஆழ்த்தியுள்ளது, மேலும் சூர்யா அடுத்தடுத்து நடித்து வரும் ‘வணங்கான், வாடிவாசல், சூர்யா 42’ படங்களில் எது முதலில் வரும் ?.என்ற குழப்பமும் வந்துள்ளது.

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment