இல்லாத ஒன்றிற்கு பிஜிஎம் போட்ட எடிட்டர்… பாலா டிவிட்!!

e5d918109f60e3615e681292114538dc

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. ஆரி, பாலா, ரம்யா, சோம், ரியோ ஆகிய 5 இறுதிப்போட்டியாளர்களுள் ஆரி  பிக்பாஸ் டைட்டில் வென்றெடுத்தார்.

ஆயிரம் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் பாலா இல்லை என்றால் இந்த சீசன் இவ்வளவு விறுவிறுப்பாக சென்று இருக்காது என்பதை யாரும் மறுக்க முடியாது. பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த சீசன் பரபரப்பாக சென்றதற்கு நிகழ்ச்சியின் எடிட்டர்  தான் காரணம் என்று ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வந்தனர். 

பல காட்சிகளை மிகவும் விறுவிறுப்பாக்க பிக்பாஸ் குழு மிகவும் சிரத்தையுடன் செயல்பட்டிருந்தனர். பலரும் யார் அந்த எடிட்டர் எங்களுக்கே அவரை பார்க்கணும் போல இருக்கிறது என்று கூட வேடிக்கையாக கூறிவந்தனர்.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு பாலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது ஒரு பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறும் பொழுது “இவர் தான் நாம் அனைவரும் தேடிக் கொண்டிருந்த பிக்பாஸ் எடிட்டர். இல்லாத ஒன்றிற்கு பிஜிஎம் போட்டவர். 

எடிட்டரின் மைண்ட் வாய்ஸ் இப்படித்தான் இருந்திருக்கும் “ராசா எங்களுக்கு கண்டன்ட் கொடுத்த தெய்வமே. பிக்பாஸையே தூக்கி நிறுத்தின சிங்கமே. நீ இல்லனா நாங்க இல்லய்யா” என்று நினைத்திருப்பார். என்னிடம் அவர் கூறும்போது “எங்கள்  வாழ்க்கையை நீங்கள் ஈசியாக்கி விட்டீர்கள் என்று கூறினார்” என்று வேடிக்கையாக பதிவிட்டுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.