ஆரியுடன் சேர்ந்து படமா? என்ன கேள்வி இது… பாலாவின் பதில் இதோ?

f979e5522406ca9631ef0415eb070871-1

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. ஆரி, பாலா, ரம்யா, சோம், ரியோ ஆகிய 5 இறுதிப்போட்டியாளர்களுள் ஆரி  பிக்பாஸ் டைட்டில் வென்றெடுத்தார்.ஆயிரம் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் பாலா இல்லை என்றால் இந்த சீசன் இவ்வளவு விறுவிறுப்பாக சென்று இருக்காது என்பதை யாரும் மறுக்க முடியாது. 

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஆரி மற்றும் பல விஷயங்களை குறித்த ரசிகர்களின் கேள்விகளுக்கு பாலா மனம் திறந்து பதிலளித்துள்ளார். அப்படி ரசிகர் ஒருவர் “பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ஆரியை சந்தித்தீர்களா?” என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் “பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஆரியை சந்திக்க வில்லை. 

ஆனால் இறுதி நிகழ்ச்சி நடந்த அன்று இரவு நாங்கள் மீட் செய்தோம். அந்த வெற்றியை கொண்டாடினோம். ஆரியை சீக்கிரமே பார்க்கணும்” என்று கூறியுள்ளார். மேலும் “நீங்களும் ஆரியும் சேர்ந்து ஒரு படம் நடிப்பீர்களா?” என்ற ரசிகரின் கோரிக்கைக்கு  “நிச்சயம் அதற்கான வாய்ப்பு இருந்தா நிச்சயம் பண்ணுவோம்” .

மேலும் “ரியோவை உங்களுக்கு பிடிக்குமா?” என்று கேள்விக்கு “நிச்சயம் எனக்கு பிக்பாஸ் வீட்டில் இருந்த அனைவரையும் பிடிக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஸ்டைலில் அந்த விளையாட்டை விளையாடினார்கள். அந்த ஸ்டைலில் குறைகள் இருந்தாலும் மனிதர்களாக எனக்கு அனைவரையும் மிகவும் பிடிக்கும்” என்று கூறியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.