பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சூடு பிடித்த ஆடு விற்பனை!! – சுமார் ரூ.3 கோடிக்கு மேல் வசூல்;;

இஸ்லாமியர்கள் கொண்டாடும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தென்மாவட்டங்களில் புகழ்பெற்ற எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் சுமார் ரூ.3 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை ஆகின.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இருக்கும் எட்டயபுரம் ஆட்டுச் சந்தை தென்மாவட்டங்களில் புகழ்பெற்ற சந்தை ஆகும். இங்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கமாக இருந்துவருகிறது.

அந்த வகையில் இன்றைய தினத்தில் தென்காசி, தூத்துக்குடி, சிவகங்கை மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் மாடுகளை விற்பதற்கும் வாங்குவதற்கும் வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஒரு ஆடு 6 முதல் 30 ஆயிரம் வரையில் விற்பனையாகி வருகின்றனர். நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாட இருக்கும் நிலையில் இன்று ஆட்டுச் சந்தை களைகட்டியுள்ளது.

மேலும், சந்தையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் குவிந்த நிலையில் சுமார் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை ஆனதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment