Entertainment
ஒரு வழியாக வருகிறது பக்ரீத்
பக்ரீத் பண்டிகை வந்து ஒரு வாரமாகி விட்டது. இப்போது வரவிருப்பது பக்ரீத் என்ற படம் விக்ராந்த் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படம் தயாரித்து பணிகள் முடிந்து நீண்ட நாட்களாகிறது.
விக்ராந்த் நடித்துள்ள இப்படம்
கடந்த மூன்று மாதத்துக்கும் மேலாக கண்ணாமூச்சி காட்டி வருகிறது இப்படம். இப்போ ரிலீஸ், நாளை ரிலீஸ் என தொடர் கண்ணாமூச்சி விளையாட்டில் இப்படம் தள்ளி தள்ளி செல்கிறது.
பக்ரீத் பண்டிகைக்கு வெளியாக இருப்பதாகவும் சொல்லப்பட்டது. அப்போதும் ரிலீஸ் ஆகவில்லை.
ஒரு வழியாக இப்படம் வரும் 23ம் தேதி வெளிவருகிறது.
ஒட்டகத்துக்கும் ஒரு மனிதனுக்கும் உள்ள பாசப்பிணைப்பை சொல்லும் படமாக இது வருகிறது.

