உலகை காக்கும் காவலாளி பைரவர்

அனைத்து சிவாலயங்களிலும் பைரவர் சன்னதி உள்ளது. எல்லா சிவாலயங்களிலும் இரவு பூஜை முடிந்து கோவில் நடை சாத்தும்போது பைரவருக்கு தான் கடைசியாக பூஜை செய்வர் ஏனென்றால் பைரவர் சிவாலயத்தை காவல் காப்பவர் ஆவார்.

இரவில் சிவாலய பூஜைகள் முடிந்து கோவில் நடை சாற்றும்போது, பைரவர்தான் கோவிலை காவல் காக்கிறார் என்பது ஐதீகம்.

பல யுகங்கள் முன் ஈசனின் அவதாரமாக உருவானவர்தான் பைரவர். தேய்பிறை அஷ்டமி அன்று பைரவரை வணங்குவதன் மூலம் அனைத்து நன்மைகளையும் அடைய முடியும்.

கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை அஷ்டமி பைரவர் ஜென்மாஷ்டமியாக கருதப்படுகிறது.

பைரவர் சனீஸ்வரனின் குரு ஆவார். சனி சம்பந்தமாக எந்த ஒரு பிரச்சினை இருந்தாலும் சனீஸ்வரனின் குருவான பைரவரை வணங்குவதால் சனி தோஷத்தில் இருந்து சனியின் குருநாதரான பைரவர் காப்பாற்றி விடுவார் என்பது ஐதீகம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews