கள்ளக்குறிச்சி விவகாரம்: பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன்!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி கடந்த மாதம் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்நிலையில் மாணவியின் மரணம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ஜாமீன் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.

அதே சமயம் மாணவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் காசி விஸ்வநாதன் ஸ்ரீமதி உடலை 2 முறை பிரேத பரிசோதனை செய்ததில்,முதல் மற்றும் 2 வது பரிசோதனைகளில் சில வேறுபாடுகள் இருப்பது  தெரியவந்துள்ளதாக கூறினார். குறிப்பாக 2 வது பரிசோதனையில் உடலில் காயங்கள் அதிகமாக இருப்பதாக தெரிவித்தார்.

இதனால் மாணவி பலவந்த படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. அதே நேரத்தம் கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாக தனது தரப்பில் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இந்த சூழலில் மரணம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்ட 4 பேரையும் எந்த பிரிவின் கீழ் கைது செய்தீர்கள்? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியிருந்தது. இந்நிலையில் பள்ளி தாளாளர் உட்பட 4 பேருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

அதேபோல் மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு நாளைய தினத்தில் ஸ்ரீ மதியின் தாயார் தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை வைப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.