பத்திரிகையாளர் சித்திக் கப்பானுக்கு ஜாமின்: உச்ச நீதிமன்றம் உத்தரவு!!

2020ல் உ.பி. ஹத்ராஸில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற சித்திக் கப்பானுக்கு, ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உத்திர பிரதேசத்தின் ஹத்ராஸ் நகரத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் 2020-ம் ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி நான்கு ஆதிக்கசாதி வெறியர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர்.

குறிப்பாக பெண்ணின் முதுகெலும்பை உடைத்து, கழுத்தை நெறித்து மிகவும் கொடூரமான முறையில் கிடத்தை கண்டு அப்பெண்ணின் பெற்றோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் செப்டம்பர் 29-ம் தேதி இறந்தார்.

இத்தகைய சம்பாமானது நாட்டையே உலுக்கியது. இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வந்தது. அதே சமயம் உ.பி காவல்துறையின் குற்றவாளிகளை காப்பாற்ற பெண்ணின் உடலை யாருக்கும் தெரியாமல் எரித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் வகையில் கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பன் ஈடுப்பட்ட நிலையில் அம்மாநில அரசு கைது செய்தது. இந்த சூழலில் தற்போது அவருக்கு ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment